- கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
பட்டுத்துணி
- படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
பட்டாசு
- ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
பற்கள்
- உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
அகப்பை
- காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
சூரியன்
- கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?
சோளக்கதிர்
- கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
உப்பு
- ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
கடல்
- காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?
நிழல்
- இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
சைக்கிள்
- சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
கண்
- ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
ஆமை
- வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
முட்டை
- எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
அடுப்புக்கரி
- உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
பெயர்
- யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
கண் இமை
- வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
சிரிப்பு
- வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன?
நாய்
- இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
வாழை
- வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
சோளம்
- இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன?
பணம்
- டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
கொசு
- கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?
பூசனிக்கொடி
- எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
குடை
- தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
தொலைபேசி
- பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?
தேங்காய்
- தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
மீன் வலை
- படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
பட்டாசு
- உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
பாய்
- மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?
சிலந்தி வலை
Comments
Post a Comment