விடுகதைகள் | Vidukathai in Tamil - Part 1

  1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? 
    தேள்
  2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? 
    தலைமுடி
  3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான், அவன் யார்? 
    வெங்காயம்
  4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? 
    கரும்பு
  5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன? 
    விழுது
  6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? 
    பட்டாசு
  7. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? 
    மூச்சு
  8. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்? 
    பூரி
  9. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்? 
    காகம்
  10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ? 
    வெண்டைக்காய்

Comments