Skip to main content
தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs part 9
- ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
- இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்
- நாய் விற்ற காசு குரைக்குமா?
- மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
- நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
- பல துளி பெருவெள்ளம்.
- பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
- குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
- கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
- சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
- கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
- நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
- சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
- நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
- நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்.
- குரங்கின் கைப் பூமாலை.
- நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
- ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
- பூனை கொன்ற பாவம் உன்னோடு , வெல்லம் தின்ற பாவம் என்னோடு.
- கொல்லைக்குப் பல்லி , குடிக்குச் சகுனி
Comments
Post a Comment