தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs part 8

  1. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

  2. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.

  3. தனி மரம் தோப்பாகாது.

  4. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

  5. கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

  6. செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

  7. வளவனாயினும் அளவறிந் தளித்துண்.

  8. ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?

  9. எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.

  10. தங்கம் தரையிலே தவிடு பானையிலே.

  11. குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.

  12. சாரத்தை உட்கொண்டு சக்கையை உமிழ்ந்துவிடுவதுபோல்.

  13. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

  14. தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?

  15. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

  16. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

  17. கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.

  18. வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.

  19. அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

  20. மாரடித்த கூலி மடி மேலே.

Comments