தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs part 7

  1. அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

  2. இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

  3. கீறி ஆற்றினால் புண் ஆறும்.

  4. எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.

  5. எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.

  6. நித்திய கண்டம் பூரண ஆயிசு.

  7. மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.

  8. எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?

  9. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

  10. நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு. 

  11. மவுனம் கலக நாசம்.

  12. பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர். 

  13. ஓடுகிற கழுதை வாலைப் பிடித்தால் , உடனே கொடுக்கும் பலன் (உதய்).

  14. பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது .

  15. இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

  16. கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

  17. பசியுள்ளவன் ருசி அறியான்.

  18. ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

  19. கீர்த்தியால் பசி தீருமா?

  20. ஆரால் கேடு, வாயால் கேடு.

Comments