Skip to main content
தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs part 6
- அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
- காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
- சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
- உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
- பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
- கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
- காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
- மத்தளத்திற்கு இரு புறமும் இடி.
- அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
- கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
- முளையில் கிள்ளாதது முற்றினால், கோடாலிகொண்டு வெட்ட வேண்டும் .
- கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?
- சொல்வல்லவனை வெல்லல் அரிது.
- எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
- இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!
- நுணலும் தன் வாயால் கெடும்.
- கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
- கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
- உழக்கு மிளகு கொடுப்பானேன், ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன் ?
- கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
Comments
Post a Comment