தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs part 5

  1. கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன்.
    பொருள்: எந்த ஒன்றையையும் அதை பயன்படுத்துவதால் மட்டுமே நன்மை அளிக்கும்.
  2. கர்மத்தினால் வந்தது தர்மத்தினால் தொலைய வேண்டும்.
    பொருள்: நாம் செய்த தீவினையை ஒரு நற்செயல் புரிவதன் மூலம் ஈடு செய்ய வேண்டும்.
  3. கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா? 
    பொருள்: ஒரு விடயத்தால் பயனில்லை எனத் தெரிந்த பின்பும் அதில் ஈடுபட்ட பிறகு பின்விளைவுகளுக்கு வருந்த கூடாது.
  4. நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
    பொருள்: ஒருவர் ஏதாவது ஒரு வகையில் மேன்மை பெற்றால், மீண்டும் பழைய நிலைக்கு செல்ல விரும்ப மாட்டார்கள்.
  5. மிதித்தாரை கடியாத பாம்புண்டோ
    பொருள்: ஒரு செயலுக்கான எதிர்வினையை அனுபவிக்காதவர் என்று எவரும் இல்லை. ஏராளமான தமிழ் பழமொழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள தமிழ் பழமொழிகள் அனைத்திற்கும் பொருள் கொடுக்கப்பட்டுள்ளன. 
  6.  சொல் அம்போ வில் அம்போ? 

    பொருள்: வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை விட மிக வேகமாக சொல்லும் வார்த்தை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும்.


நிச்சயம் இந்த தமிழ் பழமொழிகள் அனைத்தும் பலருக்கும் உதவும் என நம்புகிறோம். 

Comments