Skip to main content
தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs part 4
- இட்டு கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லை
பொருள்: பிறருக்கு தான தர்மங்களை வழங்கி அழிந்தவருமில்லை, அவற்றை வழங்காமல் வாழ்ந்தவருமில்லை.
- கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான்
பொருள்: தனது திறமையின்மையை மறைக்க பிறவற்றை சிலர் குறை கூறுவர்.
- உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது
பொருள்: உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது.
- ஊதாரிக்கு பொன்னும் துரும்பு
பொருள்: சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு எந்த ஒன்றின் மதிப்பையும் அறிய மாட்டார்கள்.
- ஏணி கழிக்கு கோணல் கொம்பு வெட்டலாமா
பொருள்: ஒரு விடயத்தை செய்வதற்கு தெளிவான திட்டமிடல் அவசியம்.
- செக்கை வளைய வரும் எருதுகள் போல
பொருள்: எந்த ஒரு உத்வேகமும் இல்லாமல் ஒரே மாதிரியான செயல்களை செய்பவர்களை குறிக்கிறது.
- சேர இருந்தால் செடியும் பகை
பொருள்: யாருடனும் அதிக நெருக்கத்துடன் இருந்தால் அங்கே பகை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
- தழைத்த மரத்திற்கு நிழல் உண்டு
பொருள்: பக்குவம் பெற்ற ஒருவரால் எல்லோருக்கும் நன்மை ஏற்படும்.
- துணை போனாலும் பிணை போகாதே
பொருள்: ஒருவர் யாருக்கும், எதற்கும் பிணையாக இல்லாமலிருப்பது நன்று.
- நெடும்பகலுக்கும் உண்டு அஸ்தமனம்
பொருள்: எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுண்டு என்பதை குறிக்கிறது.
Comments
Post a Comment