Skip to main content
தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs part 3
- ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்
பொருள்: எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு
- இருகினால் களி இளகினால் கூழ்
பொருள்: எந்த ஒரு விடயத்திலும் எவ்வகையிலாவது நமக்கு நன்மை உண்டு.
- சங்கரா சங்கர என்றால் சாதம் வாயில் வந்து விழுமா?
பொருள்: ஒரு செயலுக்குரிய முயற்சியில்லாமல் வெறும் வாய்ப்பேச்சு பயன் தராது.
- ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல
பொருள்: வறட்டு பிடிவாதம் கொண்டவர்கள் தாங்கள் அறிந்ததே உண்மை தாங்கள் செய்வதே சரி என எண்ணுவர்.
- உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன் இலை தேடுவான்
பொருள்: ஒருவனுக்கு தன் காரியம் வெற்றி பெற்று விட்டால் அதற்கு அடுத்தகட்ட காரியங்களை மேற்கொள்வான். அந்த காரியம் நடக்காத ஒருவன் அதற்காக தொடர்ந்து முயற்சிப்பான்.
- யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
பொருள்: ஒரு விடயம் நடப்பதற்கு முன்பே அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே நமக்கு தெரியும்.
- உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
பொருள்: தன்னிடம் இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டும் முயற்சி வீண்.
- ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க
பொருள்: நாம் என்ன தான் கடினமாக முயன்றாலும், நமக்கு எது கிடைக்க வேண்டும் என்று இருப்பதோ அதுவே கிடைக்கும்.
- பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
பொருள்: பணத்தின் சக்தியின் முன் மனிதனின் உயர்வான குணங்களுக்கு மதிப்பிருக்காது.
- தேரை இழுத்து தெருவில் விட்டது போல
பொருள்: மிக உயர்வானவற்றை தரம் தாழ்த்தி விட கூடாது.
Comments
Post a Comment