Skip to main content
தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs part 13
- ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
- தவளை தன் வாயாற் கெடும்.
- தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்த அகம்
- அற்ப அறிவு அல்லற் கிடம்.
- மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
- குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
- வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும்.
- நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
- தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
- தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
- அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
- சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?
- வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
- துட்டு வந்து போட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொடியிலே விழுந்ததோ?
- சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
- கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
- கெண்டையைப் போட்டு வராலை இழு.
- மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும்.
- உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
- படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
- ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வேரு நாளாச்சுது.
- செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
- எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
- அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
- ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
- இரும்பு அடிக்கிற இடத்தில நாய்க்கு என்ன வேலை ?
- தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
- காணி ஆசை கோடி கேடு.
- கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
- பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.
- அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
- உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
- எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
- அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
- தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
- காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை. 287 உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
- இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
- புயலுக்குப் பின்னே அமைதி.
- மாற்றானுக்கு இடங் கொடேல்.
- கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்.
- கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
- ஆழமறியாமல் காலை இடாதே.
- இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
- எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
- காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
- மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.
- நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.
- தானாடா விட்டாலும் சதையாடும்.
- குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
Comments
Post a Comment