தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs part 12

  1. நாய் வாலை நிமிர்த்த முடியாது.

  2. அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான், குடிகிறவன் ஒன்று நினைதுக்க் குடிக்கிறான்.

  3. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

  4. ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.

  5. கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

  6. குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.

  7. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

  8. தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.

  9. வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல.

  10. ஆனை படுத்தால் ஆள் மட்டம். 

  11. தொடையில் புண்ணை நடையில் காட்டுகிறதா ?

  12. சோம்பித் திரியேல்.

  13. புத்திமான் பலவான்.

  14. இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை.

  15. காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

  16. காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

  17. பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

  18. பொங்கியும் பால் புறம் போகவில்லை.

  19. சுக துக்கம் சுழல் சக்கரம்.

  20. இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

  21. எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

  22. சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

  23. இறைக்கிற ஊற்றே சுரக்கும்.

  24. கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.

  25. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே.

  26. மாடம் இடிந்தால் கூடம்.

  27. செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.

  28. எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை.

  29. கடலுக்குக் கரை போடுவார் உண்டா?

  30. இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

  31. காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

  32. வெளுத்ததெல்லாம் பாலல்ல.

  33. வருந்தினால் வாராதது இல்லை.

  34. காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

  35. நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.

  36. பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.

  37. விதி எப்படியோ மதி அப்படி.

  38. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.

  39. சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?

  40. நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.

  41. நீலிக்குக் கண்ணீர் இமையிலே.

  42. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

  43. படையிருந்தால் அரணில்லை.

  44. எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,

  45. உளவு இல்லாமல் களவு இல்லை.

  46. ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.

  47. பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.

  48. கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.

  49. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.

  50. தாழ்ந்து நின்றால் , வாழ்ந்து நிற்பாய்.

Comments