தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs part 11

  1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

  2. பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.

  3. இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே.

  4. ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.

  5. கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

  6. காற்றில்லாமல் தூசி பறக்குமா?

  7. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

  8. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

  9. இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.

  10. அறிய அறியக் கெடுவார் உண்டா?

  11. மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?

  12. தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.

  13. குலத்துக்கு ஈனம் கோடாலிக்காம்பு.

  14. மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.

  15. மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.

  16. புண்ணியத்துக்கு உழுத குண்டையை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல.

  17. நாலாறு கூடினால் பாலாறு.

  18. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

  19. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.

  20. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.

  21. மீதூண் விரும்பேல்.

  22. நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.

  23. நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை.

  24. தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

  25. கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.

  26. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.

  27. ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.

  28. கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

  29. மன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி.

  30. எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

  31. பக்கச் சொல் பதினாயிரம்.

  32. ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

  33. ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.

  34. சர்க்கரை என்றால் தித்திக்குமா?

  35. நன்மை கடைப்பிடி.

  36. எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

  37. முருங்கை பருத்தால் தூணாகுமா?

  38. கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.

  39. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

  40. அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?

  41. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

  42. கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.

  43. கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு.

  44. பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

  45. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.

  46. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

  47. சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது.

  48. நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.

  49. அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

  50. மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.

  51. நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.

  52. அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி .

  53. கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.

  54. அறமுறுக்கினால் அற்றும் போகும்.

  55. வெளவாலுக்கு யார் தாம்பூலம் வைத்தார்கள் ?

  56. வீட்டுக்கு செல்வம் மாடு , தோட்டச் செல்வம் முருங்கை.

  57. இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.

  58. கனிந்த பழம் தானே விழும்.

  59. கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.

  60. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.

  61. நோய்க்கு இடம் கொடேல்.

  62. உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.

  63. கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.

  64. கடல் திடலாகும், திடல் கடலாகும்.

  65. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

  66. உளை (அல்லது சேறு) வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய் அலைகிறதுபோல்.

  67. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்

  68. எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.

  69. ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

  70. இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

  71. கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.

  72. வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.

  73. வானம் சுரக்க , தானம் சிறக்கும்.

  74. குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

  75. ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.

  76. புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

  77. கல்லாதவரே கண்ணில்லாதவர்.

  78. கைய பிடித்து கள்ளை வார்த்து , மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?

  79. காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.

  80. உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.

Comments