தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs part 10

  1. அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்.

  2. நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.

  3. எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?

  4. உடல் ஒருவனுக்கு பிறந்தது , நாக்கு பலருக்கு பிறந்தது .

  5. கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.

  6. கதிரவன் சிலரை காயேன் என்குமோ?

  7. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

  8. கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக.

  9. இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா ? 90 கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.

  10. உண்பான் தின்பான் பைராகி, குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி.

  11. கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

  12. இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

  13. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.

  14. எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.

  15. கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?

  16. காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

  17. ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

  18. கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.

  19. தேன் ஒழுக பேசி , தெருவழியே விடுகிறது.

  20. முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

  21. சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்.

  22. தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை  சுடும் .

  23. நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.

  24. அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

  25. சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.

  26. ஆடு கொழுக்கிறதெல்லாம், இடையனுக்கு லாபம் .

  27. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

  28. நாவு அசைய , நாடு அசையும்.

  29. சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

  30. இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.

  31. பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.

  32. எழுதுகிறது பெரிதல்ல , இன்னும் அறிந்து சேர்க்கிறது பெரிது

  33. மனம் போல வாழ்வு.

  34. கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.

  35. அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

  36. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

  37. விளையும் பயிர் முளையிலே தெரியும்.

  38. உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

Comments