பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா ஒன்றை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்திருக்கிறார்கள். திடக் கழிவு மேலாண்மையில் இது ஒரு மைல்கல் என்று நம்பப்படுகிறது. நவீன உலகை அச்சுறுத்தும் அரக்கன்களில் பிளாஸ்டிக் முதன்மையானது. அதுவும் பாலியூரித்தேன் வகை பிளாஸ்டிக்குகள் மக்கவே மக்காத இயல்புடையவை.
சூடோமோனாஸ் புடிடா (Pseudomonas putida) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பாக்டிரீயா கடுமையான பாலியூரித்தேன் வகை பிளாஸ்டிக்கைக் கூட நொதித்து எளிய மக்கும் பொருளாக மாற்றும் இயல்புடையது. இந்த வகை பாக்டீரியா சுற்று சூழலுக்கு எந்த அளவுக்கு நல்லது என்ற ஆய்வையும் விஞ்ஞானிகள் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பரிசோதனை மட்டும் வெற்றி அடைந்தால், உலகை அடைத்துக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து ஓரளவு நமக்கு விடுதலைக் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்தி ருக்கிறார்கள்.
Comments
Post a Comment